0
நாடு பூராகவும் தொழுநோய் எச்சரிக்கை.!!!

நாடு பூராகவும் தொழு நோய் பரவும் ஆபத்து காணப்படுவதால் மக்களை விழிப்பாக இருக்குமாறு  சுகாதார திணைக்களம்  அறிவுறுத்தியுள்ளது.

நாடு முழுவதுமாக வருடத்திற்கு 1700 – 2000 தொழுநோயாளர்கள்  அடையாளம் காணப்படுகின்றனர். இவ்வாறு இனங்காணப்படுபவர்களில்  அதிகமானவர்கள்  மேல் மாகாணத்தை சேர்ந்தவர்களாக  அடையாளம் காணப்பட்டுள்ளதாக கம்பஹா மாவட்ட தொற்று நோய் பிரிவு வைத்தியர் கிரிஷாந்த தெரிவித்துள்ளார்.

சனக்கூட்டம் நெரிசலாக உள்ள பிரதேசங்களில் குறித்த நோய் பரவுவதற்க்கான வாய்ப்புக்கள் அதிகமாக காணப்படுவதாக புள்ளிவிபரங்களில்   குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த ஒருவரின் உடலில் தழும்புகள் காணப்பட்டால் உடனடியாக சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் தவறும் பட்டத்தில் குணப்படுத்த முடியாத நிலைமை காணப்படும் எனவும் குறிப்டுடப்பகின்றது.

சிறுபிள்ளைகள் வெளியில் சென்றுவரும் போது கூடுதலான கவனம் செலுத்துதல் அவசியமாகிறது.அதாவது இவ்வாறான தொற்றுக்கள் ஏற்படுவதை சிறுவர்கள் அவதானிக்க தவறக்கூடும். இதன் காரணத்தினால் இவ் விடயத்தில் பெற்றோர் அதிக சிரத்தை எடுக்கவேண்டும்.

உடலில் சந்தேகத்திற்கிடமான அடையாளங்கள் தென்பட்டால் உடனடியாக  வைத்தியசாலைக்கு சென்று இதற்க்கான  வைத்திய ஆலோசனை பெற்றுக்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Post a Comment

 
Top