0
வவுனியா புதிய பேருந்து நிலையமும், முகம் சுழிக்கும் பயணிகளும் - பாராமுகமாகவிருக்கும் வவுனியா நகரசபை.!!!

வவுனியாவில் புதிதாக அமைக்கப்பட்ட  பேருந்து நிலையத்தில் பாவனைக்குதவாத நிலையில் பல பொருட்கள் அகற்றப்படாமல் காணப்படுகின்றன.

பல பயணிகள் தூரப் பிரதேசங்களிலிருந்து வருகை தருவதுடன், தமது தனிப்பட்ட தேவைகளை பூர்த்தி செய்யமுடியாத துர்ப்பாக்கிய நிலை காணப்படுகின்றது.

குறிப்பாக குடிநீர் மற்றும்  இதர தேவைக்கு பயன்படுத்தப்படும்  மாபிள் கோப்பைகளே  பயன்படுத்த முடியாதளவிற்கு செயலிழந்து காணப்படுகின்றது.

இவ் விடயம் தொடர்பாக வவுனியா நகரசபையினர் கூடுதலான கவனம் எடுக்கவேண்டும், மற்றும் கழிவகற்றும் சுழற்ச்சி முறை,சொத்துக்கள் பராமரிப்பு தொடர்பான விடயங்களை கவனத்தில் கொள்ளவில்லை என்பதுமே புலனாகிறது.

சம்பந்தப்பட்ட சுகாதார அதிகாரிகள் இவ்விடயங்களை கண்காணிக்காத நிலை காணப்படுன்கிறது. இதை விட பழைய பேருந்து நிலையம் கடந்த காலங்களில் மிகவும் சுகாதார சீர்கேடான முறையில் செயற்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

குறித்த விடயம் தொடர்பில் சம்மந்தப்பட்டவர்கள் உடன் கவனமெடுக்கவேண்டும் என்பது அனைவரதும் எதிர்பார்ப்பாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.


Post a Comment

 
Top