0
கிளிநொச்சி, முரசுமோட்டை பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் விபத்தில் மரணமடைந்துள்ளார்.!!!


கிளிநொச்சி, முரசுமோட்டை பகுதியில் இன்று (07) இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உ யிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் பிற்பகல் 2.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது -

டிப்பர் வாகனத்தில் சாரதியுடன் நடௌபு ரீதியாக கதைத்துவிட்டு இறங்கும் வேளையில், குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு உ யிரிழந்தவர் சம்மந்தப்பட்ட வாகனத்திலிருந்து  இறங்குக முற்பட்ட வேளையில் தவறி விழுந்துள்ளார்.தவறி வீழ்ந்ததை கட்டுகொள்ளாமல் வாகனத்தை செலுத்த முற்பட்ட போது, வாகனசாரதியின் கவனயீனம் காரணமாகவே இவ் விபத்து நேர்ந்துள்ளது.

சம்பவத்தில் உயிரிழந்தவர் முரசுமோட்டடை, ஐயன் கோவிலடியைச் சேர்ந்த அல்வின் அனுரா என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையாவார்.

வாகன சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதோடு,
சடலம் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment

 
Top