0
கம்போடியாவில் தமிழ்க் கவிஞர் மாநாட்டில் விருது பெறும் ஈழத்துக் கவிஞர்.!!!

வவுனியைச் சேர்ந்த கவிஞருக்கு கம்போடியாவில் நடைபெறவுள்ள உலகத் தமிழ்க் கவிஞர் மாநாட்டில் விருது வழங்கி கௌரவிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கம்போடிய அரசின் கலை கலாசாரத் துறை,கம்போடிய அங்கோர் தமிழ்ச் சங்கம்,பன்னாட்டுத் தமிழர் நடுவம், கம்போடிய சீனு ஞானம் டிராவல்ஸ் ஆகியோர் இணைந்து நடாத்தும் உலகத் தமிழ்க் கவிஞர் மாநாடு செம்டம்பர் 21,22ம் திகதிகளில் கம்போடியா சியாம்ரீப் நகரில் நடைபெறவுள்ளது

இந் நிகழ்வில் இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, ஐரோப்பா, கனடா, அமெரிக்கா, நியூசிலாந்து, அவுஸ்திரேலியா என சர்வதேசமெங்குமிருந்து கவிஞர்கள் கம்போடியாவில் ஒன்றுகூடவுள்ளனர்.

உலகெங்கும் வாழும் கவிஞர்கள் ஒன்றிணையும் கவிப் பெருவிழாவாக இம்மாநாடு நடைபெற உள்ளது. இம்மாநாட்டில் கலந்து கொள்வதற்காக வவுனியா தமிழ்ச் சங்கத்தின் செயற்குழு உறுப்பினரும் எழுத்தாளரும், கவிஞருமான கலாபூசணம். தமிழ்மணி.மேழிக்குமரன் அவர்கள் கம்போடியா சென்றுள்ளதுடன் அங்கு நடைபெறும் கவியரங்கிலும் மேழிக்குமரன் பங்கேற்கவுள்ளார்.

மேலும் இவர் இலக்கியத்துறைக்காக  ஆற்றிவரும் சேவையினைப் பாராட்டி கம்போடிய அரசு இவருக்கு விருது வழங்கிக் கௌரவிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Post a Comment

 
Top