0
தொலைபேசி வாயிலாக ஏற்பட்ட முரண்பாடு பின்பு கைகலப்பாக மாறியது - வவுனியாவில் சம்பவம்.!!!


தமிழரசு கட்சியின் வவுனியா மாவட்ட இளைஞரணியை சேர்ந்த பா.சிந்துஜன் என்பவரும் சீலன் என்பவருமே இன்று தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

தொலைபேசி வாயிலாக குறித்த இருவருக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாடு, பின்பு கைகலப்பாக மாறியது.

தமிழரசுகட்சியின் வவுனியா மாவட்ட தலைமை அலுவலகம் தாயாகத்திற்கு முன்பாக ஒருவரை ஒருவர் நேரில் சந்தித்துக்கொண்டதன் அடிப்படையில் குறித்த இருவரும் கைகலப்பில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழ்அரசு கட்சியின் வவுனியா மாவட்ட தலைவரும், முன்னாள் மாகாண அமைச்சருமான ப.சத்தியலிங்கத்துடன் சிந்துஜன் என்பவர் வாகனத்தில் வந்து இறங்கியபோது, அந்த பகுதிக்கு சீலனும் வர, களேபரம் ஆரம்பித்தது.

இவ்விடயம் தொடர்பில் தொடர்புபட்ட இருவரையும் பாரிய முயற்சியின் பலனாக சமாதானம் செய்த முன்னாள் வடமாகாண அமைச்சர் ப.சத்தியலிங்கம், அவர்களை அலுவலகத்திற்குள் கூட்டிச் சென்றார்.
மேலும்  சம்பவம் தொடர்பாக கலந்துரையாடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.Post a Comment

 
Top