0
யாழ்.சாவகச்சேரியில் புகையிரதம் முன் பாய்ந்து ஒருவர் தற்க்கொலை.!!!

யாழிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற புகையிரதத்தின் முன்பாக பாய்ந்துஆணொருவர்  உயிரை மாய்த்துள்ளார்.

கொழும்பு - 02 பேஸ்லேன் பகுதியைச் சேர்ந்த வரதராஜா செல்லப்பா என்ற 75 வயது மதிக்கத்தக்க முதியவரே இவ்வாறு உயிரை மாய்த்துக்கொண்டவராவார்.

இச் சம்பவமானது இன்று(09) காலை 7.10 மணியளவில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் இடம்பெற்றுள்ளது.

குறித்த நபர் இதைப்போன்று பல தடவைகள் புகையிரதம் முன் பாய்ந்து உயிரை மாய்க்க முற்பட்டபோது, அப்பகுதி மக்களால் காப்பற்றப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.

சம்பவத்தில் இறந்தவரின் உடலம்  சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில்   ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

Post a Comment

 
Top