0
எழுக தமிழ் எழுச்சி பேரணிக்கு ஆதரவு கோரி வவுனியா வடக்கில் விழிப்புணர்வு பேரணி.!!!

எழுக தமிழ் மக்கள் எழுச்சி போராட்டத்திற்காக மக்களை அணி திரட்டும் முகமாக விழிப்புணர்வு பேரணி ஒன்று இன்று (14)  வவுனியா வடக்கில் முன்னெடுக்கப்பட்டது.

இவ் நிகழ்வானது ஓமந்தை,கனகராயன்குளம்,புளியங்குளம் மற்றும் மக்கள் நடமாட்டம்  அதிகம் உள்ள  பகுதிகளிலும், இவ் பிரச்சார நடவடிக்கை வவுனியா மாவட்ட  ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி மற்றும் தமிழ் மக்கள் கூட்டணியினரால் இன்று காலை 10மணியிலிருந்து மாலை 2.30மணி வரை முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இந் நிகழ்வில் முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் தியாகராசா, வவுனியா வடக்கு உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், அரசியல் கைதிகளின் உறவினர்கள், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் உறுப்பினர்கள் ,தமிழ் மக்கள் கூட்டணியின் வவுனியா மாவட்ட உறுப்பினர்கள் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Post a Comment

 
Top