0
மின்சாரம் தாக்கி வெளிநாட்டு இளைஞன் உயிரிழப்பு - இலங்கையில் சம்பவம்.!!!

மின்சாரம் தாக்கி இளைஞர் ஒருவர் உயிராழந்துள்ள சம்பவம் ஜா-எல பகுதியில் இடம்பெற்றுள்ளது.

அதாவது அப்பகுதியில் அமைந்துள்ள ஆடைத் தொழிற்சாலையில் ஒன்றில் பணியாற்றிக் கொண்டிருந்த வெளிநாட்டு இளைஞனே ஆவ்வாறு  உயிரிழந்துள்ளார்.

குறித்த இளைஞன் தொழிற்சாலையில் இயந்திரம் ஒன்றை பொருத்திக் கொண்டிருந்த சந்தர்ப்பத்திலேயே  மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்த இளைஞன்  19 வயதான துருக்கி நாட்டைச் சேர்ந்தவரென அறிய முடிகிறது.

பிரேத பரிசோதனைக்காக சடலம் ஜாஎல வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை  ஜா-எல பொலிஸார் மேற்க்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

 
Top