0
யாழ் பலாலியிலிருந்து  இந்தியாவுக்கான விமான சேவைகள் ஆரம்பமாகும் நாள் அறிவிப்பு!!!

யாழ்ப்பாணம்  பலாலி சர்வதேச விமான நிலையம் புனரமைப்பு வேலைகள் இடபெற்ற நிலையில் தற்போது இந்தியாவிற்க்கான விமான சேவைகள்  எதிர்வரும் ஒக்ரோபர்- 16 ஆம் திகதி முதல் ஆரம்பிக்குமென இலங்கை விமான சேவைகள் அதிகார சபையின் தலைவர் எச்.எம்.சி. நிமலசிறி தெரிவித்துள்ளார்.

குறித்த தினமன்று யாழ்.குடாநாட்டுக்கும் இந்தியாவுக்குமிடையிலான விமான சேவைகள் ஆரம்பிக்கப்படுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதே நேரம் பலாலி விமான நிலையத்தை செயற்படுத்துவதற்க்கான ஏற்பாடுகள் யாவும்  இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன.

மேலும் இது தொடர்பில் தெரியவருவது -

குறித்த விமான சேவையானது, பலாலியிலிருந்து கொச்சின், மும்பை, புதுடெல்லிக்கு விமானங்கள் பறப்பில் இடுபடுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

 
Top