0
செயற்கை கை ஒன்றினை உருவாக்கி சாதனை படைத்த முல்லை மல்லாவி இளைஞன்.!!!

பல்கலைக் கழக மாணவன் செயற்கை கை ஒன்றினை உருவாக்கி சாதனை புாிந்துள்ளார்.

முல்லைத்தீவு மல்லாவியைச் சேர்ந்த பத்மநாதன் துசாபன் என்ற பல்கலைக்கழக மாணவனே இவ்வாறு செயற்க்கை கையை உருவாக்கி சாதனை படைத்துள்ளார்.

இறுதி கட்ட யுத்தத்தின் போது, முல்லைத்தீவு சுதந்திரபுரம் பகுதியில்  இடம்பெற்ற எறிகணைத்தாக்குதலில் குறித்த மாணவனின் தந்தையார் கொல்லப்பட்டுள்ளார்.

எறிகணைத்தாக்குதலில் காயமுற்ற துசாபனின் தந்தை உள்ளிட்டவர்களை வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்ற போது எடுக்கப்பட்ட புகைப்படம், இன்றும் அக் குடும்பத்தின் மனதில் கனத்த நினைவலைகளை அடையாளம் காட்டி நிற்கின்றது.இவ்வாறானதொரு துன்பியலான நிகழ்வுக்குள் கட்டுண்டு போன மாணவனே, இன்று இச் சாதனை படைத்துள்ளார்.

இவ்வாறானதொரு கண்டுபிடிப்பின் மூலம் கைகளை இழந்து தமது சுய தேவைகளைக்கூட பூர்த்தி செய்ய முடியாதளவுக்கு துன்பங்களை அனுபவிப்பவர்களுக்கு இது ஒரு நிவாரணியாக அமையும் என தான் நம்புவதாக கூறியுள்ளதோடு, குறித்த கண்டுபிடிப்பை குறைந்த விலையிலே விற்பனை செய்யவுள்ளதாகவும் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment

 
Top