0
கொட்டகலையில் அமையவிருந்த விமான நிலையத்தை நல்லாட்சி அரசாங்கம் தடுத்துவிட்டது - ஆறுமுகன் தொண்டமான் கவலை.!!!

மலையக மக்கள் முன்னணியின் 50 ஆதரவாளர்கள் இலங்கை தொழிலாளர் காங்கிரஸில் இணைந்த நிகழ்வில் தொண்டமான் கவலை வெளியிட்டுள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது  -

மலையக மக்கள் இணைந்து கடந்த காலத்தில் நல்லாட்சி அரசாங்கத்திற்கு பலத்தை  வழங்கியதன் காரணமாகவே மலையக்தில் படித்த இளைஞர், யுவதிகளுக்கு தொழில்வாய்ப்புகளை பெற்று கொள்ளமுடியாத சூழ்நிலை ஏற்பட்டதாக இலங்கைத்  தொழிலாளர் காங்ரஸின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான  ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

மலையக மக்கள் முன்னணியின் ஆதரவாளர்கள் 50 பேர் இலங்கை தொழிலாளர்  காங்கிரசில்  நேற்று இணைந்து கொண்ட நிகழ்விலேயே அவர் இவ்வாறு  கூறியுள்ளார்.

குறித்த நிகழ்வில் மேலும் கருத்து தெரிவித்த ஆறுமுகன் தொண்டமான்,
கடந்த அரசாங்கத்தின் காலத்தில் மலையகத்தில் பல்வேறு அபிவிருத்தி  திட்டங்களை மேற்கொண்டு வந்தோம். கொட்டகலை பகுதியில் விமானநிலையம் ஒன்றை  அமைக்க நடவடிக்கை முன்னெடுக்கபட்டுவந்த நிலையில்தான் ஆட்சிமாற்றம்  இடம்பெற்றது.
நல்லாட்சி அரசாங்கத்தை மக்கள் புறக்கணித்திருந்தால்  மலையக இளைஞர், யுவதிகளுக்கு கொட்டகலையில் அமைக்கப்படவிருந்த விமானநிலையத்தில்  தொழில்வாய்பினை பெற்றுக்கொடுத்திருப்போம் என தெரிவித்தார்.

இ.தொ.கா. பொதுச் செயலாளர் அனுசியா சிவராஜா,மத்திய மாகாண சபை முன்னாள் உறுப்பினர் மருதபாண்டி ராமேஸ்வரன், நுவரெலியா மாவட்ட முன்னாள்  பாராளுமன்ற உறுப்பினர் பி. இராஜதுறை மற்றும்  கொட்டகலை பிரதேச சபை தலைவர் ராஜமணி  பிரசாத் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Post a Comment

 
Top