0
வடக்கின் தங்கக்குரல் போட்டியின் விண்ணப்ப திகதி 
இம் மாதத்துடன் நிறைவு.!!!

வட மாகாண கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களின் வழிநடத்தலில்  வடமாகாண  ஆளுநர் செயலகம்  , மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் வசந்தம் TV வசந்தம் FM இணைந்து நடாத்தும் வடக்கின் தங்கக்குரல்
போட்டியில் கலந்துகொள்ள ஆர்வமுள்ள வடமாகாணத்தை சேர்ந்தவர்கள் எதிர்வரும் செப்டம்பர் 30 ஆம் திகதிக்கு முன்னர் தமது விண்ணப்பங்கள் கிடைக்ககூடியதாக அனுப்படவேண்டும்.

குறித்த போட்டியின் குரல் தேர்வில் 15  தொடக்கம் 30 வயதிற்கு இடைப்பட்டவர்கள் பங்குபற்றலாம்.இதற்கான விண்ணப்பப்படிவங்கள் ஆளுநர் செயலகம் மற்றும் np.gov.lk என்ற வடமாகாண சபையின் இணையத்தள முகவரியில்  பெற்றுக்கொள்ளலாம்.

விண்ணப்பப்படிவத்தினை  'வடக்கின் தங்கக்குரல்' வட மாகாண ஆளுநர் செயலகம், பழைய பூங்கா, சுண்டுக்குளி , யாழ்ப்பாணம் என்னும் முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றது.

இப் போட்டி நிகழ்வானது இடம் பெறும் இடங்களும் அறியதரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Post a Comment

 
Top