0
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சட்டவிரோதமான சிறுநீரக மோசடி வியாபாரம் - டாக்டர் ரங்க மிகார வீரக்கொடி.!!!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சட்டவிரோதமான சிறுநீரக மோசடி வியாபாரம் தொடர்பாக செய்தி ஊடகங்களில்  பதிவேற்றம் செய்யப்பட்டதன் பின்பு டாக்டர் ரங்க மிகார வீரக்கொடி ஆபாச வார்த்தைகளினால் ஊடகவியலாளர்களை திட்டி தீர்த்துள்ளார்.

தனது அதிகாரிகள் மற்றும் பெண் ஊழியர்கள் சிலர் சட்டவிரோத சிறுநீரக மோசடி குறித்து ஊடகங்களுக்கு தகவல்களை வழங்கியுள்ளதாகவும் குறித்த வைத்தியர்  குற்றம் சாட்டியுள்ளார்.

குறித்த வைத்தியரின் பிரிவில்  தனது கோபத்தை வெளியிட்ட வைத்தியர் "எனக்கு பிரச்சனை செய்தால், பர தமிழர்களை பார்த்துக்கொள்கிறேன்" என இனவெறி கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அவர் "பர தமிழர்" என குறிப்பிட்டது யாழ்ப்பாண வைத்தியசாலையில் சிகிச்சைக்காக வரும் தமிழ் நோயாளிகளையே.

சிறுநீரக மோசடி தொடர்பாக தகவல்கள் சுகாதார அமைச்சு மற்றும் காவல்துறை மேற்கொண்ட விசாரணைகளை மூடிமறைப்பதற்காக டாக்டர் ரங்க மிகார வீரக்கொடி தற்போது அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் உதவியை நாடுவதாக அறிய தகுந்த வட்டாரங்களின் மூலம் தகவல் கிடைத்துள்ளது.

சட்டவிரோத மனித உடற்பாகங்கள் திருட்டு குற்றச்சாட்டில் குற்றம் சாட்டப்பட்டுள்ள டாக்டர் ரங்க மிகார வீரக்கொடி  மீது தகுந்த விசாரணைகளௌ  நடத்தப்படுகிறதா என தகவல் அறிய வடக்கில் பல அரசியல்வாதிகள் தயாராகி வருகின்றமை குறிப்பிடதக்கது.

Post a Comment

 
Top