0
கள்ளியங்காடு இந்து பொது மயானத்திலிருந்து தோண்டி எடுக்கப்பட்டது தீவிரவாதியின் உடல் எச்சங்கள்.!!!

மட்டக்களப்பு நீதவானின் முன்னிலையில், இராணுவம், அதிரடிப்படை, பொலிசாரின் பலத்த பாதுகாப்பின் மத்தியில் உடல் எச்சங்கள் தோண்டி எடுக்கப்பட்டது.

இதன்போது, மயானத்திற்குள் யாரும் நுழைய முடியாதபடி பலத்த பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டது. ஊடகவியலாளர்கள், மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர்கள் உள்ளே நுழைய அனுமதி கேட்டபோதும், அனுமதி வழங்கப்படவில்லை.

மயானத்தை சூழ நின்று பார்த்தவர்களையும் பொலிசார் விரட்டியடித்தனர்.

தீவிரவாதியின் உடலை மாவட்ட நிர்வாகம் கள்ளியங்காடு இந்து மயானத்தில் புதைத்திருந்தது. இதற்கு மட்டக்களப்பு எம்.பி, வியாழேந்திரன் தலைமையில் எதிர்ப்பு போராட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டன.

மட்டக்களப்பு நகரையே போராட்டக்காரர்கள் ஸ்தம்பிக்க வைத்ததையடுத்து, இந்த விவகாரம் இன்னொரு பரிமாணத்தை எட்டி, நீதிமன்றத்தின் விசாரணைக்கு சென்றது. இதன்போது, புதைக்கப்பட்ட உடலை உடன் தோண்டியெடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

 
Top