0
உந்துருளியில் பாடசாலைக்கு பிள்ளைகளை அழைத்துச் செல்லும் போது தலைக்கவசம் அணிவித்து செல்ல தவறும் பட்சத்தில் சட்டநடவடிக்கை எடுக்கப்படும்.!!!


எதிர்வரும் திங்கட்கிழமை (02) அனைத்து பாடசாலைகளும் மூன்றாம் தவணைக்காக ஆரம்பிக்கப்படவுள்ளன.

இதே வேளை மாணவர்களின் பெற்றோர்கள் கவனித்துக் கொள்ளவேண்டிய விடயமாக
தங்களுடைய பிள்ளைகளை உந்துருளியில் அழைத்துச் செல்லும் போது தலைக்கவசம் அணிவித்து செல்ல வேண்டும் என அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது.

வீட்டில் இருந்து பாடசாலைக்கு அழைத்துச் செல்லும் சந்தர்ப்பங்களில் தலைக்கவசம் அணிவது பிள்ளைகளின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கின்றது.இதன் காரணமாக விபத்துக்கள் மூலம் ஏற்படும் சேதங்களை ஓரளவேனும் குறைத்துக்கொள்ள முடிகின்றது.

இவ் வீதி ஒழுங்கைமீறி அழைத்து செல்லும் பெற்றோர்களுக்கு எதிராக இலங்கை போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகளினால் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதோடு தண்டப் பணமும் அறவிடப்படும் என அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
Post a Comment

 
Top