0
யார் ஜனாதிபதி வேட்பாளர் என்பது பற்றி  தற்போது தெரிவிக்க முடியாது - அமைச்சர் மனோ கணேசன் தெரிவிப்பு.!!!


ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி ​வேட்பாளர் தொடர்பாக இறுதித் தீர்மானம் எட்டப்பட்டுவிட்டதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் யார் ஜனாதிபதி வேட்பாளர் என்பது பற்றி  தற்போது தெரிவிக்க முடியாது என தெரிவித்துள்ளார்.

சில கட்சிகள் தமது வேட்பாளர்கள் யார் என்பதை உடனடியாக அறிவித்திருந்த போதும், தற்போது அவர்களுக்குள் குழப்பமான நிலை ஏற்பட்டுள்ளதை அவனிகேக முடிகிறது. ஐக்கிய தேசியக் கட்சி அவ்வாறு அவசரப்படவேண்டிய அவசியம் எதுவுமில்லை என தெரிவித்துள்ளார்.

எமது கட்சியின் வேட்பாளர் யார் என்பதை நாம் கட்சியின் உயர்பீடத்தில் கலந்துரையாடி தீர்மானித்து விட்டோம். இருந்தும் குறித்த வேட்பாளர் யார் என்பதை ஊர்ஜிதமாக  என்னால் கூறமுடியாது. கட்சியால் அதிகாரபூர்வமாக வேட்பாளரது பெயர் குறிப்பிடப்படும்வரை பொறுத்திருங்கள் என அமைச்சர் மனோ கணேசன்  தெரிவித்துள்ளார்.

Post a Comment

 
Top