0
பொலிஸார் மீது துப்பாக்கிச் சூடு.!!!


அக்குரெஸ்ஸ, திப்பட்டுவாவ சந்தியில் இன்று (06) பொலிஸார் இருவர் மீது இனந்தெரியாத நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச்சென்றுள்ளனர்.

உந்துருளியில் வந்த நபர்களே குறித்த  பகுதியில் கடமையில் இருந்த இரு பொலிஸார் மீது  துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளனர்..

மேலும் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது -

துப்பாக்கிச் சூட்டின் போது காயமுற்ற பொலிஸார் மேலதிக சிகிச்சைகளுக்காக மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று (06) இரவு பொலிஸார் ரோந்து பணியில் ஈடுப்பட்டுக் கொண்டிருந்த சமயம்,  சந்தேகத்திற்கு இடமான முறையில் சென்ற  உந்துருளி ஒன்றை நிறுத்த முற்பட்டபோது, நிறுத்தாமல் தொடர்ந்து சென்றதன் காரணத்தால் பொலிஸார் துரத்தி சென்றுள்ளனர்.

குறித்த உந்துருளியில் சென்றவர்கள் பொலிஸார் மீது துப்பாக்கி பிரயோகத்தை  மேற்கொண்டனர்.

இன்று அதிகாலை 1.00  மணி அளவில் இச் சம்பவம் இம்பெற்றுள்ளது.

துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்க்கொண்டுள்ளனர்.

Post a Comment

 
Top