0
அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மற்றும் முன்னாள் மாகண சபை உறுப்பினர்  ஜெயதிலக ஆகியோரின்  நிதி ஒதுக்கீட்டின் கீழ் வவுனியாவில் அபிவிருத்தி வேலைகள்.!!!


முன்பள்ளி சிறார்களின் ஆரம்பக் கல்வி மற்றும் ஆளுமை விருத்தியினை கட்டியெழுப்புவதற்காக
கைத்தொழில் வாணிப அலுவல்கள், நீண்டகால இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம், கூட்டுறவு அபிவிருத்தி, திறன்கள் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மற்றும் முன்னாள் மாகண சபை உறுப்பினர்  ஜெயதிலக ஆகியோரின்  நிதி ஒதுக்கீட்டின் கீழ் வவுனியா கணேசபுரம் மேற்கு விவேகானந்தா முன்பள்ளி கட்டிடம்,சிறுவர்களுக்கான சிறுவர் பூங்கா திறப்பு விழா மற்றும் முன்பள்ளிக்கான சுற்று வேலிக்கான அடிக்கல் நாட்டு விழா  இன்று (01) நடைபெற்றது.

 இந்நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின்  முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் v ஜெயதிலக அமைச்சரின் இணைப்பு செயலாளர்
அல் ஹாஜ் முத்து முகமட், நகர சபை உறுப்பினரும்  நகர இணைப்பாளருமான
MS அப்துல் பாரி, நகர சபை உறுப்பினர் ARM லரீப், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் திரு ஜோர்ஜ் மற்றும்  திரு ஆனந்தன் ஆகியோர் குறித்த நிகழ்வில்  கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment

 
Top