0
வவுனியா வேப்பங்குளம் பகுதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதி.!!!


வவுனியா வேப்பங்குளம் பகுதியில் இன்று காலை 9 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வவுனியா வேப்பங்குளம் பகுதியிலுள்ள தமது வீட்டிலிருந்து நகர் நோக்கி மன்னார் வீதி வழியாக சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்று வேப்பங்குளம் 5ம் ஒழுங்கைக்கு முன்பாக வீதியில் சென்றுகொண்டிருந்தது.

இதன் போது எதிர் திசையில் வந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து, மகிழுந்து ஒன்றை முந்திச் சென்றுகொண்டிருந்த முச்சக்கரவண்டியையும் சேர்த்து முறையற்ற விதத்தில் முந்திச் செல்ல முற்பட்டதன் காரணத்தால்  போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து மோட்டார் சைக்கிளில் மோதுண்டதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் காயமடைந்துள்ளனர்.

இவ் விபத்தில் 30,25 வயதுடைய கணவன் மனைவி ஆகிய இருவரும் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான விசாரணைகளை வவுனியா போக்குவரத்து பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment

 
Top