0
வவுனியா மதவுவைத்தகுளத்தில் வாள்வெட்டு தாக்குதல், கிராமவாசிகளால் முறியடிப்பு.!!!

வவுனியா மதவுவைத்தகுளத்தில் காணப்படும் வீடொன்றுக்குள் வாள்களுடன்  புகுந்து தாக்குதல் நடாத்த முயற்சித்தவர்களை கிராம வாசிகள் மடக்கிப்பிடித்துள்ளனர்.

இன்று (11) காலை இச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் தெரியவருவது, 

சம்பவம் இடம்பெற்ற வீட்டிலிருந்த நபர் ஒருவருக்கும் தாக்குதல் மேற்க்கொண்டவருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.

அவ் இடத்திலிருந்து வெளியேறிய இளைஞன் பின்பு, முச்சக்கரவண்டியில் வாள்களுடன் சில இளைஞர்களோடு குறித்த வீட்டில் புகுந்து தாக்க முற்பட்டபோது, கிராம வாசிகளால் இவ் அசம்பாவிதம் தடுக்கப்பட்டுள்ளது.

இச் சம்பவத்தில் மூன்று இளைஞர்களை கிராம வாசிகள் மடக்கிப்பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைக்க முற்பட்டபோது,
இனிவரும் காலங்களில் இவ்வாறான சட்டவிரோத செயற்பாட்டில் ஈடுபடமாட்டோம் என கிராம வாசிகளுடன் உடன்பாட்டுக்கு வந்த பிறது கடுமையான எச்சரிக்கையின் பின்பு விடுவிக்கப்பட்டனர்.


Post a Comment

 
Top