0
மட்டக்களப்பு – வாழைச்சேனை,முறாவோடை பாடசாலை மைதானத்திற்கு அமைக்கப்பட்ட சுற்றுமதில்கள் இனம்தெரியாதவர்களால்  உடைப்பு.!!!

மட்டக்களப்பு,வாழைச்சேனை முறாவோடை பாடசாலை மைதானத்திற்கு அமைக்கப்பட்ட சுற்றுமதில்கள் இனம்தெரியாதவர்களால்  இன்று உடைக்கப்பட்டுள்ளது.

சுமார் 30 க்கும் அதிகமானவர்கள் முச்சக்கர வண்டியில் வாள்கள் மற்றும் தடிகளுடன் வருகை தந்து பாடசாலை மீது கல் எறிந்து தாக்குதல் நடத்திச் சென்றுள்ளனர்.

குறித்த பாடசாலையில் மாலை நேர வகுப்புக்கள் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில், இத் தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.இதன் காரணமாக அப்பகுதியில் அச்ச நிலைமையும் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் சம்பவம் குறித்து பாடசாலை நிர்வாகத்தினர் பொலிஸ் உயர்அதிகாரி மற்றும் இராணுவ உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றதையடுத்து அப்பகுதியில் பொலிஸார் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.Post a Comment

 
Top