0
வவுனியா பொது வைத்தியசாலையில் தேடுதல் வேட்டை - வெடி பொருட்கள் இருக்கலாமென சந்தேகம்.!!!

பொலிஸாருக்கு கிடைக்கபெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக இன்று(12)  வவுனியா பொது வைத்தியசாலைப் பகுதியில்  வெடிபொருட்கள் இருக்கலாம் என்பதற்கு அமைவாக, மோப்ப நாயின் உதவியுடன் தேடுதல் வேட்டை நடைபெற்றது.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவது -

குறித்த வைத்திய சாலையின் வெளிநோயாளர் பிரிவு, நோயாளர்கள் விடுதி , விபத்துப்பிரிவு , மலசலகூடம் , உணவகம் மற்றும் அதிகாரிகளின் பகுதி என அனைத்து பகுதியிலும் தீவிர தேடுதல் வேட்டை முன்னெடுக்கப்பட்டது.

இத் தேடுதலானது சுமார் இரண்டு மணிநேரத்திற்கு மேலாக இடம்பெற்றது.எனினும் எவ்வித வெடிபொருள்களும் பொலிஸாரினால் கைப்பற்றப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment

 
Top