0
உழவு இயந்திரம் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபகரமாக பலி.!!!

முல்லைத்தீவு மாவட்டம் பாலியாற்றில் மணல் ஏற்றிய உழவு இயந்திரம் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் குடும்பஸ்தர் ஒருவர் (05) நேற்று மாலை  பலியாகியுள்ளார்.

மல்லாவி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்விளான் பகுதி, பாலி ஆற்றில் மணல் ஏற்றிய நிலையில் உழவு இயந்திரமானது ஆற்றில் இருந்து மேல் பகுதிக்கு செல்ல முற்பட்ட வேளையிலேயே உழவு இயந்திரம் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியதன் காரணத்தால்  உழவு இயந்திரத்தின்  சாரதி பலியாகியுள்ளார்.

இவ் விபத்தில் பலியாகியவர் மூன்றாம் திட்டம்,கல்விளான் ,துணுக்காயைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான தம்பிமுத்து சுரேஷ்குமார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச் சம்பவம் தொடர்பில் மல்லாவி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

 
Top