0
வரலாற்றுப் பிரசித்திபெற்ற யாழ். 
தெல்லிப்பழை ஸ்ரீதுர்க்காதேவி தங்கரதத்தில் வீதியுலா வந்து இன்று அடியார்ட்க்கு அருள்பாலிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.!!!வரலாற்றுப் பிரசித்திபெற்ற யாழ்.
தெல்லிப்பழை ஸ்ரீதுர்க்காதேவி தேவஸ்தானத்தில் புதிதாக வடிவமைக்கப்பட்ட தங்கரத வெள்ளோட்ட விழா திங்கட்கிழமை(02) பிற்பகல் சிறப்புற இடம்பெற்றது.

வெள்ளோட்ட விழாவையொட்டிய பொங்கல் மற்றும் கிரியை வழிபாடுகள் நிறைவுற்றதைத் தொடர்ந்து பிற்பகல்-03.45 மணியளவில் தங்கரத வெள்ளோட்டம் ஆரம்பமானது.

சிற்பக்கலா வித்தகர் செ.பாலச்சந்திரன் குழுவினர் மேற்படி புதிய தங்கரதத்தை தமது அழகிய கைவண்ணத்தில் வடிவமைத்துள்ளனர்.


தங்கரத வெள்ளோட்ட நிகழ்வில் தெல்லிப்பழை ஸ்ரீதுர்க்காதேவி தேவஸ்தானத் தலைவர் செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு. திருமுருகன், தேவஸ்தானப் பிரதமகுரு சிவஸ்ரீ சு.செந்தில்ராஜக் குருக்கள் மற்றும் துர்க்கை அம்பாளின் அடியார்கள் எனப் பெருமளவானோர் கலந்து சிறப்பித்தனர்.   

இதேவேளை, ஸ்ரீதுர்க்காதேவி தேவஸ்தான வருடாந்தப் பெருவிழா தற்போது ஆரம்பமாகி இடம்பெற்று வரும் நிலையில் இவ்வாலயத்தின் ஐந்தாம் திருவிழா நாளை இன்று புதன்கிழமை (04) இரவு தங்கரதத்தில் துர்க்காதேவி வீதியுலா வலம் வந்து அருள்பாலிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment

 
Top