0
மாவை சேனாதிராஜாவுக்கு முன் தீ மூட்ட முயற்சி - சாவகச்சேரியில் பதற்றம்.!!!

யாழ்.சாவகச்சேரியில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் சுகாதாரத் தொண்டர்களை நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா நேரில் சென்று சந்தித்துள்ளார்.

இதன்போது போராட்டத்தில் ஈடுபட்டுவரும் ஒருவர் தbனக்கு தானே மண்ணெண்ணெய் ஊற்றி தீ மூட்ட முயற்சித்ததால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது.

மேலும் சாவகச்சேரி நகர சபை மண்டபத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், நியமனம் பெறவுள்ள சுகாதாரத் தொண்டர்கள் மாற்று வழியில் உள்ளே அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

இதன் காரணமாக ஆத்திரமடைந்த போராட்டக்காரர்களும் உள்ளேசெல்ல முற்பட்டமையால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவுவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Post a Comment

 
Top