0
வவுனியா செட்டிக்குளம் பிரதேச செயலாளர் பிரிவில் சமயங்களுக்கிடையில் முறுகல் நிலை.!!!

வவுனியா செட்டிக்குளம் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கங்கன்குளம் பிரதேசத்தில்
இந்து சமயம்,கிறிஸ்த சயவம் போன்றவற்றை தழுவிய மக்கள் அப்பகுதியில் 109 குடும்பங்கள் அப்பகுதியில்  2001ம் ஆண்டிலிருந்து வாழ்ந்துவருகின்றனர்.

குறித்த கிராமத்தில்  புதிதாக குடியமர்ந்த  குடும்பத்திற்கென பிரத்தியேகமாக வழங்கப்பட்ட காணியில் வழிபாட்டிற்க்கான சபை கட்டிடம் ஒன்றை அமைத்துள்ளனர்.

அக் குடும்பத்தினர்  பிற சமயங்களையும் அவர்களின் வழிபாட்டு முறைகளையும் மிக கீழ்த்தரமான முறையில் விமர்சித்தும் வருகின்றனர்.

குறித்த பிரதேச வாசிகள் சம்மந்தப்பட்ட பல தரப்பினர்க்கும் இது தொடர்பில் முறையிட்டுள்ளனர்.

சம்மந்தப்பட்டவர்களால் கையளிக்கப்பட்ட முறைப்பாட்டில் கங்கன்குளம் கிராமத்தில் 100 குடும்பத்திர் வாழ்ந்து வருவதாகவும் இவர்களில் சபையை சேர்ந்தவர்கள் 11 குடும்பங்களும்  வாழ்ந்து வருகின்றனர்.

அத்தோடு 09 குடும்பங்கள் துடரிக்குளத்தில் உள்ள ஆலயத்திற்கு சென்று வருதோடு மீதி  3 குடும்பங்களுளேள்  எமது  கிராமத்தில் அத்துமீறி கிறிஸ்தவ சபையை அமைத்துள்ளனர்.

குறித்த நபர்கள் நேரம் பாராது பலத்த சப்தம் இடுவதனல் அப்பகுதியில் அன்றாட வாழ்க்கையை நடத்த முடியாத துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது.

எமது பகுதியில் மாணவர்களின் கல்விச்செயற்பாடு இதனால் பாதிக்கப்படுவதோடு முதியவர்கள் கர்ப்பிணிகள் மற்றும் சுகவீனமுற்றவர்கள் என பலரும் பல அசோகரியங்களை சந்திப்பதனால், குறித்த கிறிஸ்தவ சபையை இடம் மாற்றக்கோரி கோரிக்கை விடுத்துள்ளனர்.

இவ் முரண்பாட்டு நிலையை எமது கிராமத்திலிருந்து முற்றாக நீக்குமாறு
செட்டிக்குளம் பிரதேச செயலாளர் மற்றும் மத்தியஸ்த சபையின் கருத்தாடலின் பிரகாரம் மத அனுட்டானங்களை தடை செய்ய முடியாது, இருந்தும் சமூகத்தோடு இரு தரப்பினரும் இணங்கி வாழவேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளமை கூறிப்பிடத்தக்கது.


Post a Comment

 
Top