0
இலங்கை போக்குவரத்துச் சபையின் பேருந்துக்குள் துப்பாக்கிச்சூடு - ஒருவர் மரணம்.!!!

இலங்கை போக்குவரத்துச் சபையின் பேருந்து ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில்  ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த பேருந்தில் சென்ற சக பயணி ஒருவரே, இவ்வாறு துப்பாக்கிச் சூட்டை மேற்க்கொண்டதோடு  தப்பிச்சென்றுள்ளார்.

இச் சம்பவம் எல்பிட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அடகொஹொடொ, போகஹ சந்திக்கு அருகில் இன்று (06) காலை 8.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்த நபர் வழக்கு ஒன்றிற்காக  இன்று காலை நீதிமன்றம்  சென்று கொண்டிருந்தபோதே  இவ்வாறு சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

இவ் விடயம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்க்கொண்டுள்ளனர்.

Post a Comment

 
Top