0
யாழில் சகோதர்களுக்கிடையில் கத்திக்குத்து.!!!

யாழ்ப்பணம் மத்திய பேருந்து நிலையத்திற்கு  அருகில் உள்ள அங்காடித் தொகுதியில்  இளைஞர்கள் கைகலப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இச் சம்பவமானது இன்று(13) குறித்த பகுதியில் வடைக்கடை வைத்திருக்கும் நபர் ஒருவருக்கும் அவரது இரு சகோரர்களுக்குமிடையில் இடம்பெற்ற கைகலப்புச் சம்பவமாகும்.

இச் சம்பவம் தொடர்பில் தெரிவருவது -

இவ் மோதலுடன் தொடர்புபட்ட  சகோதரர்களுக்கிடையில் தொலைபேசி ஊடாக  இடம்பெற்ற வாய்த்தர்க்கம் முற்றியே  பின்பு  அடிதடியில் முடிந்துள்ளது.

குறித்த மோதலில் கத்தியால் குத்தி வயிறு மற்றும் கை நரம்பு பகுதியில் காயங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.தாக்குதல் நடாத்திய நபர் ஒருவர் தப்பியோட முயன்ற போது அப்பகுதியில் நின்றவர்களால் மடக்கிப்பிடிக்பட்டுள்ளார்.

சம்பவ இடத்தில் இருந்த சகோதரனின் வடைக் கடை அடித்து நொருக்கப்பட்டுள்ள நிலையில், காயத்துக்குள்ளானவர்கள் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு பொலிஸார் விசாரணைகளை மேற்க்கொண்டுள்ளனர்.Post a Comment

 
Top