0
தமிழ் தேசிய கூட்டமைப்பு தேர்தல் காலங்களில் மாத்திரம் எழுத்து மூல உடன்படிக்கை கோருவது மக்களை ஏமாற்று வேலை - முன்னாள் வடமாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே.!!!

தமிழ் தேசிய கூட்டமைப்பு தேர்தல் காலங்களில் மாத்திரம் எழுத்து மூல ஒப்பந்தம், உடன்படிக்கை போன்றவற்றை கோருவது மக்களை ஏமாற்று வேலை எனவும் ஒப்பந்தங்கள் உடன்படிக்கைகள் பற்றி பேச முதல் கலந்துரையாட முன்வர வேண்டும் எனவும்  முன்னாள் வடமாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.

இடம்பெறவிருக்கும்  ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரான கோட்டாபாய ராஜபக்ஸவினை ஆதரித்து மன்னாரில் நடை பெற்ற மக்கள் சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவது -

எத்தனை தடவை ஒப்பந்தங்களை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்கள் மாத்திரம் அல்ல தமிழ் அரசியல் தலைவர்களும் எழுதிப் பெற்றுள்ளனர்.

பண்டா செல்வா ஒப்பந்தம் பண்டாரநாயக்கவுடன் மேற்கொண்டனர். இறுதியால் அது கிழித்து போடப்பட்டது அது மட்டுமல்ல ஒரு காலத்தில் சந்திரிக்கா நாடாளுமன்றத்தில் ஒரு வரைபை கொண்டுவந்தார் அதுவும் கிழித்துப்போடப்பட்டது அவ்வாறான எழுத்து மூல ஒப்பந்தம் மாத்திரம் போதுமானதா  என தெரிவித்துள்ளார்

தேர்தல் காலங்களில் மாத்திரம் மட்டும் ஏன் தமிழ் தேசிய கூட்டமைப்பு அங்கத்தவர்கள் இவ்வாறு கோருகின்றனர் என்று தெரியவில்லை. 5 வருட காலமாக எவற்றையும் கேட்டுக்கொள்ளாது தேர்தல் அறிவிக்கப்பட்தன் பின்பே இவ்  எழுத்து மூல  கதை வருகின்றது.

ஏன்  முதல் 5 வருட காலப்பகுதியில் ஒப்பந்தத்தை பற்றி தோன்றவில்லை என கேள்வி எழுப்பியதுடன் இது ஏமாற்றுவதற்கான ஒரு வேலை எனவும் தெரிவித்தார்

அத்துடன் அந்த எழுத்து மூல ஒப்பந்தத்தில் எவற்றை  கோருகின்றார்கள் என்பது தெரியாமல் நாங்கள் எவ்வாறு தீர்மானிப்பது, முதலில் கலந்துரையாடல் நடத்த முன்வரட்டும் அதன் பின்னர் அவ்வாறான விடயங்களை கவனத்தில் கொள்ள முடியும் என தெரிவித்துள்ளார்

குறித்த நிகழ்வில் மேலும் அவர் தெரிவிக்கையில் பொதுஜன பெரமுன வேட்பாளர் கோட்டாபாய ராஜபக்ஸவிற்கு  தமிழ் மக்களின் மிகப் பெரிய ஆதரவு உள்ளமையால் 
ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளர் சஜித்தால் ஒன்றும் செய்ய முடியாது எனவும் அவர்களுக்கு தேசிய ரீதியில் ஆதரவு இல்லை எனவும் அவர்கள் மக்களுக்கு விரோதமாக செயற்படுவதால் கோட்டாபாய ராஜபக்ஸ நிச்சயம் வெற்றிபெறுவார் எனவும் தெரிவித்துள்ளார்.

Post a Comment

 
Top