0
மட்டக்களப்பு செங்கலடியில் இளைஞன் ஒருவர் விபத்தில் மரணம்.!!!

மட்டக்களப்பு செங்கலடி கொடுவாமடு பகுதியில் ஏற்பட்ட விபத்தில் 26 வயது இளைஞன் சம்பவ இடத்தில் பலியாகியுள்ளார்.

மட்டக்களப்பு செங்கலடி கொடுவாமடு பிரதேசத்தில் செங்கலடி பதுளை பிரதான வீதியில் இன்று காலை 06.00 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் 26 வயதுடைய இளைஞர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகியுள்ளார்.

செங்கலடி அம்மன்புரத்தைச் சேர்ந்த மதிஅழகன் மோகன்ராஜ்(26) என்ற இளைஞரே இவ்வாறு விபத்தில் சிக்கி பலியாகியுள்ளார்.

செங்கலடியில் இருந்து கித்துள் நோக்கி பயணித்த மோட்டார் வாகனமும் இலுப்பையடிச்சேனையில் இருந்து செங்கலடி நோக்கி வந்த கனரக டிப்பர் வாகனமும் நேருக்கு நேர் மோதுண்டதில் இவ் விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் சிக்கிய மோட்டார்சைக்கிளில் பயணித்த இளைஞனே சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன்,
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கரடியனாறு பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.

Post a Comment

 
Top