0
பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் ஆலயத்திற்க்கான அடிக்கல் நாட்டப்பட்டது.!!!

பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் அவர்களது நிதி ஒதுக்கீட்டில் மாசார் வாணன் அம்மன் ஆலய மடப்பள்ளிக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று (03) இடம்பெற்றது.

ஆலய நிர்வாகத்தினர் மற்றும் பொதுமக்களின்  தொடர்ச்சியான வேண்டுகோளை ஏற்று கிராம எழுச்சி திட்டத்தின் மூலம் பாராளுமன்ற உறுப்பினரால் குறித்த ஆலய மடப்பள்ளிக்கு நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்பட்டது.

குறித்த மடப்பள்ளிக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வில் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தவிசாளர் சுப்பிரமணியம் சுரேன்  மற்றும் உப தவிசாளர் கயன் உறுப்பினர்களான அருட்செல்வி, ரமேஷ் மற்றும் வீரபாகுதேவர் ஆகியோர் கலந்து சிறப்பித்துள்ளனர்.
Post a Comment

 
Top