0
யாழ்.மட்டுவில்,சந்திரபுரம் பகுதியில் வீடொன்றின் மீது தாக்குதல்.!!!

யாழ்.மட்டுவில்,சந்திரபுரம்  பகுதியிலுள்ள வீடொன்றின் மீது இன்று (04) அதிகாலை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நால்வர் அடங்கிய குழுவே குறித்த  தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக அறிய முடிகின்றது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது -
சம்பவம் இடம்பெற்ற  வீட்டு கேற், உந்துருளி மற்றும் ஜன்னல் கண்ணாடிகள் சேதமாக்கப்பட்டுள்ளன.
வீட்டில் இருந்தவர்கள் கூக்குரல் எழுப்பியதால் அயலவர்கள் திரண்டதையடுத்து தாக்குதல் நடத்தியவர்கள் தப்பித்துச் சென்றுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது


Post a Comment

 
Top