0
முல்லைத்தீவு நாயாறு பகுதியில் எந்தவொரு இந்து ஆலயமும் இருக்கவில்லை - எஸ்.பி.திஸாநாயக்க.!!!

முல்லைத்தீவு நாயாறு பகுதியில் எந்தவொரு இந்து ஆலயமும் இருக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

அதாவது, முல்லைத்தீவு நாயாறு குருகஹந்த விகாரை தொடர்பாக ஆராய்ந்து அதன் வரலாறு மற்றும் உண்மைத் தன்மையை அறிந்துகொண்ட பின்னரே இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா போன்றவர்கள் கருத்து வெளியிட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பத்தரமுல்லையில் உள்ள அவருடைய இல்லத்தில் இன்று (03) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில் -

முல்லைத்தீவு நாயாறு பகுதியில் எந்தவொரு இந்து ஆலயமும் இருக்கவில்லை எனவும் அன்று முதல்  குருகஹந்த என்ற பௌத்த விகாரை மாத்திரமே காணப்பட்டதோடு
அவ் விகாரையின் விகாரதிபதியே சில இந்து தெய்வங்களின் சிலைகளை குறித்த விகாரையில் வைத்து பூசித்தார்.

குறித்த பகுதியானது பௌத்தர்களின் வணக்கத்திற்குரிய இடமாகவே காணப்பட்டது என்பதற்கு வரலாற்று ரீதியாகவும், தொல்பொருள் திணைக்களத்தினதும் ஆதாரங்கள் உள்ளன.

இது தொடர்பில் முழுமையான வரலாற்றையும், உண்மையையும் சரியாக ஆராயாமல் பௌத்த மற்றும் இந்து மதத்தை மையப்படுத்தி சிங்களவர்களுக்கும், தமிழர்களுக்கும் இடையில் முரண்பாட்டைத் தோற்றுவிப்பதற்கு எவரும் முயற்சிக்க வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளார்.

Post a Comment

 
Top