0
யாழ்.பலாலி விமான நிலையம் சர்வதேச விமான நிலையம் என பெயர் மாற்றம்.!!! 

யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையம் தற்போது தரமுயர்த்தப்பட்டு யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் என பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்பிரகாரம் சர்வதேச வான் போக்குவரத்துக் கழகம், யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து சர்வதேச விமானங்களை இயக்குவதற்கு அனுமதியளித்துள்ளது.

அதேநேரம் JAF என யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கு தனித்துவமான குறியீட்டையும் வழங்கியுள்ளது.

இந் நிலையில் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து இம் மாத நடுப் பகுதியில் இந்தியாவுக்கான விமான சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Post a Comment

 
Top