0
வவுனியா பேருந்து நிலையத்தில் கஞ்சாவுடன் நபர் ஒருவர் கைது.!!!

வவுனியாவில் நேற்று இரவு 9மணியளவில் புதிய பேருந்து நிலையத்தில் யாழ்ப்பாண பகுதியிலிருந்து ஒரு கிலோ 855கிராம் கேரளா கஞ்சாவினை எடுத்து வந்த நபர் ஒருவர் பொலிஸாரால்  கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவது -

நேற்று இரவு 9மணியளவில் யாழ்ப்பாண பகுதியிலிருந்து கொழும்பு கொண்டு செல்வதற்க்கென 1கிலோ 855கிராம் கேரளா கஞ்வினை எடுத்து வந்த ஒருவரை வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் போதை ஒழிப்பு பொலிசார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர் கிரான்பாஸ் பகுதியைச் சேர்ந்த 38 வயதுடையவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபர் மேலதிக விசாரணைகளின் பின்னர் மாவட்ட நீதவான் நீதிமன்றில் இன்று ஆயர்ப்படுத்தவுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.


Post a Comment

 
Top