0
இலஞ்ச ஊழல், மற்றும் கபே (caFFE)  விழிப்புணர்வு வவுனியாவில்.!!!

இலஞ்ச ஊழல் சட்டங்கள் தொடர்பான அறிவுட்டும் வகையில்  இலஞ்ச ஊழல் திணைக்கள அதிகாரிகளாலும், நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கத்தினாலும் ( caFFE )
வவுனியா - நெடுங்கேணி, புளியங்குளம்,ஓமந்தை,தாண்டிக்குளம்
குருமன்காடு, பழைய புதிய பஸ் நிலையம் மற்றும் செட்டிகுளம் போன்ற பகுதிகளில்
2 ம் திகதி தொடக்கம் இன்று வரை மக்களுக்கு விழிப்புணர்வூட்டும் காணொளிகளும் துண்டுபிரசுரங்களும் ஸ்டிக்கர்களும் வழங்கப்பட்டு வருகின்றன.

குறித்த விழிப்புணர்வு நிகழ்வில் கபே (caFFE) அமைப்பில் வவுனியா மாவட்ட ஆலோசகர் மோகனராசா ராஜ்மோகன்  மற்றும் உறுப்பினர்கள் கலந்து மக்களுக்கு ஊழல் ஒழிப்பு தொடர்பான  விழிப்புணர்வுகளை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

 
Top